துபாய்: துபாயில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரோஹித்திற்கு பாகிஸ்தான் வீரர் பந்து வீசியுள்ளார். அவரது பந்து வீச்சு குறித்து ரோஹித் கூறுகையில் எனது காலை உடைக்க முயற்சித்தார் என்று பாராட்டியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, துபாயில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது பாகிஸ்தானைச் சேர்ந்த அவைஸ் அகமது உள்பட இருவர், இந்திய வீரர்களுக்கு பந்து வீசியுள்ளனர்.
பயிற்சிக்குப் பிறகு, அவைஸ் ஒரு டாப் கிளாஸ் பவுலர் எனக் குறிப்பிட்ட ரோஹித், இன்ஸ்விங் யார்க்கர்களால் தனது காலை அவர் உடைக்க முயற்சித்ததாகவும், வெல்டன் எனவும் பாராட்டினார். இந்த தொடரில் ரோஹித்தின் அதிரடி ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் வெகு ஆர்வத்துடன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.