புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பி சி சி ஐ பம்பர் ஆஃபர் அளிக்கவுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரும் 29ஆம் தேதி கவுகாத்தியில் பிசிசிஐ கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. இதன் செயலாளர் தேவ்ஜித் சைகியா, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் பங்கேற்கும் இக்கூட்டத்தில், வீரர்களின் மத்திய ஒப்பந்தங்கள், பணியாளர்கள் ஆட்சேர்ப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஸ்ரேயாஸ் ஐயர், மீண்டும் மத்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்படுவார் என கூறப்படுகிறது. இது அவருக்கு பிசிசிஐ அளிக்கும் பம்பர் பரிசு என விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.