லார்ட்ஸ்: இந்திய அணி முன்னாள் கிரிக்கெட் விரர் கபில்தேவ்வின் வாழ்நாள் சாதனையை பும்ரா முறியடித்து அட்டகாசமான சாதனையை செய்துள்ளார்.
3-வது டெஸ்டில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வெளிநாட்டு மண்ணில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 13-வது முறை. இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் வெளிநாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் கபில் தேவ் 12 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது.