By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அன்றாடம் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் ?
    1 Min Read
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
    பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பால் பரபரப்பு
    1 Min Read
    மிக சிறந்த மருத்துவ மூலிகை முடக்கத்தானால் ஏற்படும் நன்மைகள்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி
    1 Min Read
    நெயில் பாலிஷ் போட்டதும் உடனே காய வைப்பது எப்படி ?
    1 Min Read
    சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளும் ஸ்பூன் மசாஜ்
    2 Min Read
    எண்ணெய் சருமம் கொண்டவர்கள் சரும பராமரிப்பில் செய்யும் தவறுகள்
    1 Min Read
    ஊட்டசத்து மிகுந்த தக்காளி டோஸ்ட் செய்வது எப்படி?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அதிநவீன என்டோஸ்கோப்பிக் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை… ஐடி பணியாளருக்கு நடமாட்ட திறனை வழங்கிய மீனாட்சி மருத்துவமனை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > அதிநவீன என்டோஸ்கோப்பிக் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை… ஐடி பணியாளருக்கு நடமாட்ட திறனை வழங்கிய மீனாட்சி மருத்துவமனை
தமிழகம்

அதிநவீன என்டோஸ்கோப்பிக் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை… ஐடி பணியாளருக்கு நடமாட்ட திறனை வழங்கிய மீனாட்சி மருத்துவமனை

Nagaraj
Last updated: March 1, 2026 11:34 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: அதிநவீன என்டோஸ்கோப்பிக் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையின் மூலம் 40 வயது ஐடி பணியாளருக்கு நடமாட்டத்திறனை மீண்டும் வழங்கி தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவக்குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

முதுகுத்தண்டு வட்டில் ஏற்பட்ட பெரிய வீக்கம் காரணமாக 40 வயது தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளருக்கு ‘கௌடா ஈக்வினா சிண்ட்ரோம்’ என்ற பாதிப்பினால் கடுமையான வலியும், நடப்பதில் சிரமமும் அவருக்கு ஏற்பட்டது. • ‘யூனிலேட்டரல் பைபோர்ட்டல் எண்டோஸ்கோப்பிக் சர்ஜரி’ (UBE) என்பது, ஊசித்துளை மூலம் செய்யப்படும் ஒரு நவீன முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையாகும். சிறிய துளைகள் மூலம் நரம்பு அழுத்தத்தை நீக்கி, தசை பாதிப்பையும், ரத்த இழப்பையும் குறைக்கும் இச்சிகிச்சையினால் நோயாளி விரைவாக குணமடைய முடியும்.

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த ‘UBE’ எனப்படும் அதிநவீன எண்டோஸ்கோப்பிக் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை மூலம், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் 40 வயதான நபர் மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளார். முதுகுத்தண்டு நரம்புகள் கடுமையாக நசுக்கப்படுவதால் ஏற்படும் ‘கௌடா ஈக்வினா சிண்ட்ரோம்’ என்ற தீவிர பாதிப்பால் இவர் கடுமையான வலியால் நடக்க இயலாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த வெற்றிகரமான அறுவைசிகிச்சைக்குப் பிறகு, சில நாட்களிலேயே இவரால் மீண்டும் நடக்க முடிந்தது. அதைத் தொடர்ந்து இப்போது அவர், தனது பணிக்கு செல்ல ஆரம்பித்துள்ளார்.

காவிரி டெல்டா பிராந்தியத்தில் மீனாட்சி மருத்துவமனையால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த UBE முறை, நரம்பை அழுத்தும் முதுகுத்தண்டு வட்டை அகற்றுவதற்கு குறைந்த ஊடுருவல் உள்ள ஒரு நவீன அறுவை சிகிச்சை உத்தியாகும். இந்த முறையில் 1 செ.மீக்கும் குறைவான இரண்டு சிறிய துளைகள் மட்டுமே இடப்படும். பிரத்யேக எண்டோஸ்கோப்பிக் கருவிகள் மூலம் பாதிக்கப்பட்ட வட்டுப் பகுதி அகற்றப்படும். ஒரே துளை வழியாக இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட வட்டுகளுக்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்க முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

வழக்கமான திறந்தநிலை அல்லது மைக்ரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சைகளுடன் ஒப்பிடும்போது, இந்த முறையில் தசை பாதிப்பு மிகவும் குறைவு. ரத்த இழப்பும் குறைவாகவே இருக்கும். மருத்துவமனையில் சில நாட்கள் மட்டுமே தங்கி சிகிச்சை பெற்றால் போதும். நோயாளி விரைவாக குணமடைவதோடு, அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் வலியும் மிகக் குறைவாகவே இருக்கும். மீனாட்சி மருத்துவமனை இதுபோன்று முதுகுத்தண்டு தொடர்பான பல்வேறு பாதிப்பு நிலைகளை குணப்படுத்த இதுவரை சுமார் 50 UBE அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது.

முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் மகராஜன் தலைமையிலான அறுவை சிகிச்சை குழுவால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, மேலும் இந்த குழுவில் மயக்க மருந்து நிபுணர் டாக்டர் அரி மாணிக்கம், எலும்பியல் ஆலோசகர் டாக்டர் சண்முக ஹரிஹரன் ஆகியோர் அடங்குவர்.

இது குறித்து டாக்டர் கார்த்திகேயன் மகராஜன் கூறுகையில், “இப்பிராந்திய மக்களுக்கு இந்த UBE சிகிச்சை முறை ஒரு மிகப்பெரிய வரமாகும். இரண்டு சிறிய துளைகள் மூலம் செய்யப்படும் இந்த நவீன சிகிச்சை மூலம், சிக்கலான முதுகுத்தண்டு பிரச்சனைகளையும் எளிதாக சரிசெய்ய முடியும். இதனால் தசைகள் பாதிக்கப்படாது. ரத்த இழப்பும் குறைவாக இருக்கும் மற்றும் நோயாளி வேகமாக குணமடைந்து விரைவில் வீடு திரும்பலாம். சிறப்பான சிகிச்சை விளைவுகளை சாத்தியமாக்கும் இந்த அதிநவீன சிகிச்சையை இப்போது நாங்கள் இங்கு வழங்கி வருகிறோம்.” என்று கூறினார்.

“அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் விரைவாக இயக்கத்திறனைப் பெறுவதும், அவர்களின் உடல் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் மிகவும் திருப்தியளிக்கிறது. இந்த நவீன எண்டோஸ்கோப்பிக் சிகிச்சை முறையின் பாதுகாப்பையும், திறனையும் சிகிச்சை முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முதுகுத்தண்டு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும், அவர்கள் விரைவாக குணமடைவதிலும் இதுபோன்ற அதிநவீன எண்டோஸ்கோப்பிக் சிகிச்சைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த வசதி தற்போது டெல்டா பகுதியிலேயே கிடைப்பதால், நோயாளிகள், முதுகுத் தண்டுக்கான சிறப்பு சிகிச்சைக்காக பெருநகரங்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்று டாக்டர் கார்த்திகேயன் குறிப்பிட்டார்.

இதில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் வி. பிரவீன், எலும்பியல் துறைத் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் பார்த்திபன் எலும்பியல் ஆலோசகர் டாக்டர் பாலகுருநாதன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

You Might Also Like

வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி

நெயில் பாலிஷ் போட்டதும் உடனே காய வைப்பது எப்படி ?

சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளும் ஸ்பூன் மசாஜ்

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் சரும பராமரிப்பில் செய்யும் தவறுகள்

ஊட்டசத்து மிகுந்த தக்காளி டோஸ்ட் செய்வது எப்படி?

TAGGED:AchievementMedical TeamMeenakshi HospitalSpineThanjavurசாதனைதஞ்சாவூர்மருத்துவக்குழுவினர்மீனாட்சி மருத்துவமனைமுதுகுத்தண்டு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட் செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?