பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கொல்கத்தா 4-வது அணியாக பிளே-ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டி 8-ம் தேதி பாதியில் நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு, ஒரு வாரம் கழித்து நேற்று முன்தினம் போட்டிகள் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெங்களூரு-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று முன்தினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்ததால், போட்டி கைவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது. புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. தற்போது, கொல்கத்தா அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நான்காவது அணியாகும்.