விசாகப்பட்டினம்: இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி – லக்னா அணிகள் மோதுகின்றன. இதில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்கிறது
லக்னோ – டெல்லி அணிகள் விசாகப்பட்டினம் மைதானத்தில் மோதுகின்றன. இந்த ஐபிஎல் சீசனில் புது கேப்டன்களுடன் 2 அணிகளும் களமிறங்குகிறது.
ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணியும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்த ஆயத்தமாகி வருகின்றன. இரு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் மோதியுள்ள நிலையில், 2-ல் டெல்லியும், 3-ல் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன. இன்று வெல்லப் போவது யார்? என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாக உள்ளது,
வெற்றி பெற இரு அணிகளும் மும்முரமாக மோதும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.