சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரன், இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷை எதிர்கொள்கிறார். 14 சுற்றுகள் கொண்ட இந்த ஆட்டத்தில் டிங் லிரன் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
2-வது சுற்று டிராவில் முடிந்தது. இதையடுத்து 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதையடுத்து, அடுத்த 3 சுற்றுகளும் சமநிலையில் முடிவடைந்தன. இதனால் இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் ஓய்வுக்கு பின் இன்று 7-வது சுற்று ஆட்டத்தில் டிங் லிரன், குகேஷ் அணிகள் மோதுகின்றன.
இதில் லைரன் கருப்பு காய்களுடனும், குகேஷ் வெள்ளை காய்களுடனும் விளையாடுவார்கள். இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும்.