துபாய்: ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கங்குலி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நேற்று மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கங்குலி தலைமையிலான கிரிக்கெட் கமிட்டியில் வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா), ஹமித் ஹசன் (ஆப்கானிஸ்தான்), தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), பவுமா (தென் ஆப்பிரிக்கா) ஜோனதன் டிராட் (இங்கிலாந்து) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த கமிட்டி சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறை மாற்றம், ஆட்டத்தின் நீண்ட கால முன்னேற்றத்துக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஐ.சி.சி.க்கு தனது பரிந்துரையை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.