சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூர் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் உள்ள ஈக்வடோரியல் ஹோட்டலில் நேற்று தொடங்கியது. இதில், 18 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரனை எதிர்த்து விளையாடினார்.
முதல் சுற்றில் குகேஷ் வெள்ளை காய்களுடனும், டிங் லிரன் கருப்பு காய்களுடனும் விளையாடினர். 42-வது நகர்வில் டிங் லிரன் வெற்றி பெற்றார். மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய ஆட்டம் மாலை 6.45 மணிக்கு முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த ஆட்டத்தில் டிங் லிரன் ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 2-வது சுற்று இன்று நடக்கிறது.