சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 63 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அதன்பின் 9 இடங்கள் முன்னேறி 654 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார்.
இதற்கு இணையாக கடந்த முறை சதம் அடித்த இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 728 புள்ளிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறார். முதல் மூன்று இடங்களில் இங்கிலாந்தின் நாட் சிவர் (760), தென்னாப்பிரிக்காவின் லாரா (756), இலங்கையின் அதபாது (733) ஆகியோர் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி 703 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்தை சேர்ந்த சோஃபி (770) முதலிடத்தில் உள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா தேவி 4 இடங்கள் முன்னேறி 32வது இடத்தை பிடித்துள்ளார்.