பிரிஸ்பன்: பிரிஸ்பன் ஒலிம்பிக் கமிட்டியை ஐசிசி தலைவர் ஜெய் ஷா நேரில் சந்தித்து பேசினார். 128 ஆண்டுகளுக்கு பிறகு உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட உள்ளது. 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால், 2032-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த 1ம் தேதி ஐசிசியின் புதிய தலைவராக பதவியேற்ற ஜெய் ஷா நேற்று பிரிஸ்பேனில் உள்ள பிரிஸ்பேன் ஒலிம்பிக் கமிட்டியை நேரில் சந்தித்து பேசினார். போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் சிண்டி ஹூக் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.