ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணியின் சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் பகார் ஜமான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இதில், ஃபர்ஹான் 45 பந்துகளில் அரைசதம் (58 ரன்கள்) அடித்தார். மறுமுனையில் விளையாடிய ஃபகர் ஜமான் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சயீம் அயூப் 21 ரன்களிலும், ஹுசைன் தலாத் 10 ரன்களிலும், முகமது நவாஸ் 21 ரன்களிலும், சல்மான் அலி ஆகா 17 ரன்களிலும், ஃபஹீம் அஷ்ரம் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது.

வெற்றி பெற 172 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்தியாவின் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சுப்மான் கில் இருவரும் நூறு ரன்கள் கூட்டணியை கடந்தனர். அபிஷேக் சர்மா 74 ரன்கள் எடுத்திருந்தனர், சுப்மான் கில் 47 ரன்கள் எடுத்திருந்தனர், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாகாமல் வெளியேறினார். திலக் வர்மா 30 ரன்கள், சஞ்சு சாம்சன் 13 ரன்கள், ஹர்திக் பாண்டியா 7 ரன்கள் எடுத்தனர், இந்தியா 18.5 ஓவர்களில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
கடந்த ஏழு நாட்களில் இந்தியா இரண்டு முறை பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளையும், அப்ரார் அகமது மற்றும் ஃபஹீம் அஷ்ரஃப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.