மும்பை: 5வது டி-20 போட்டியில் இன்று இந்தியா -இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், 5வது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று (பிப்.2) மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.