சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் தொடர் அக்டோபர் 19-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
கடைசி டி20ஐ தொடர் நவம்பர் 8-ம் தேதி பிரிஸ்பனில் முடிவடைகிறது. போட்டிகள் தொடங்குவதற்கு 4 மாதங்கள் மீதமுள்ள நிலையில், இந்த 8 போட்டிகளுக்கான 90,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

சிட்னியில் நடந்த கடைசி ஒருநாள் போட்டி மற்றும் கான்பெராவில் நடந்த முதல் டி20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்கப்பட்ட மொத்த டிக்கெட்டுகளில் 16 சதவீதத்தை இந்திய ரசிகர் மன்றங்கள் வாங்கியுள்ளன.