துபாய் : இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. துபாயில் நடந்து வரும் சாம்பியன் டிராபி போட்டியில் ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்த ரன் இலக்கை விரட்டி கொண்டிருக்கிறது இந்தியா.
சாம்பியன்ஸ் டிராபி செமி பைனலில் இந்திய அணி வெற்றியை நெருங்கி வருகிறது. ஆஸி., நிர்ணயித்த 265 ரன்கள் இலக்கை விரட்டும் இந்திய அணி, 40 ஓவர்கள் முடிவில் 200/4 ரன்கள் எடுத்துள்ளது.
கோலி 80 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்த முறையும் சேஸிங் கிங் கோலி நாட்டுக்கு வெற்றியை தேடித் தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்திய அணி நிச்சயம் நிறைவேற்றும் என்று உற்சாகத்துடன் அனைவரும் உள்ளனர்.