சியோலில் நடைபெற்று வரும் சாலஞ்சர் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. தென் கொரியாவின் ஜியோங் மற்றும் பார்க் யூ ஜோடியை எதிர்கொண்ட இந்திய அணி காலிறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய அவர்கள், இரண்டாவது செட்டை 6-1 என கைப்பற்றினர். இதனால் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர் மற்றும் கலியாண்டா பூனாச்சா ஜோடி பிரிட்டனின் பாரிஸ் மற்றும் தென் கொரியாவின் நாம் ஜியுடன் மோதியது. ஆனால், 1-6, 3-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.