மும்பை. ஐபிஎல் கேப்டன்கள் கூட்டம் நடக்கிறது. இதில் இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
IPL அணிகளின் கேப்டன்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விதிகளில் ஒரு முக்கிய மாற்றம் செய்வது பற்றி விவாதிக்கப்பட உள்ளது.
பந்து மீது எச்சிலைப் பயன்படுத்துவதற்கான தடையை நீக்குவது குறித்து இன்றைய கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது. எச்சிலைப் பயன்படுத்தினால், வேகப்பந்து வீச்சாளர்கள் எளிதாக ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும்.
கொரோனா பரவல் காலங்களில் இந்த முறைக்கு ICC தடைவிதித்தது. தற்போது இந்த தடையை நீக்க வேண்டும் என கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.