புதுடெல்லி: 4-வது டெஸ்ட் கேப்டனாக கில் சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எதற்காக தெரியுமா?
இங்கிலாந்திற்கு எதிரான 5 நாள்கள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி, புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில், வரலாற்றில் 4-வது கேப்டனாக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கில் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுவரை அஜித் வடேகர் (1971), கபில் தேவ் (1986) மற்றும் ராகுல் டிராவிட் (2007) ஆகியோர் கேப்டன்களாக இருந்தபோதே இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. இப்போது நான்காவது முறையாக கில் இந்த தொடரை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகன் மத்தியில் எழுந்துள்ளது.
நிச்சயம் டெஸ்ட் தொடரை கில் வென்று சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.