பாரீஸ்: இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனை லவ்வினா, ஒலிம்பிக் போட்டியின் காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். கடந்த ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லவ்லினா, இம்முறையும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்று (ஆக.04) உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் லி குவானை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் கடுமையாகப் போராடி தோல்வியடைந்தார்.
லி குவான் 4-1 என்ற கோல் கணக்கில் லவ்லினாவை வீழ்த்தினார்.