மக்கேயில் இந்தியா ‘ஏ’ அணி தேவ்தத் பட்கல் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரின் அரைசதங்களால் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியாவில் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில், இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 107 ரன்கள் எடுத்தது.
முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 99/4 என்ற நிலையில் இருந்தது. இரண்டாம் நாளில், கேப்டன் நாதன் மெக்வீனி 39 ரன்களும், கூப்பர் கோனாலி 37 ரன்களும் எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 195 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. முகேஷ் குமார் 6 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தியா ‘ஏ’ அணி 2வது இன்னிங்சை தொடங்கிய போது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களிலும், அபிமன்யு ஈஸ்வரன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படால் இணைந்து அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தனர்.
ஆட்டநேர முடிவில் இந்தியா ‘ஏ’ அணி 2 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்து 120 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. சுதர்சன் 96 ரன்களுடனும், படிகல் 80 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.