பாரீஸ்: பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம், தொடர்ந்து மூன்று பாராலிம்பிக்ஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பாரீஸில் ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டுத் தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் ஆடவருக்கான டி63 உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன், ஷரத்குமார், சைலேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஷரத் குமார் 1.88 மீட்டர் உயரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் எறிந்து வெண்கலம் வென்றார். அமெரிக்காவின் ஃப்ரெச் எஸ்ரா 1.94 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
மாரியப்பன் 2016 பாராலிம்பிக் தொடரில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அவர் 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதைத் தொடர்ந்து தற்போது நடப்பு பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை மாரியப்பன் படைத்துள்ளார்.