டெல்லி: முழங்கால் வீக்கம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வயது 34. கடைசியாக 2023 உலக கோப்பை தொடரில் விளையாடினார்.
அவர் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவினார். கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்ட அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் ‘ஆபரேஷன்’ செய்யப்பட்டது. இதில் இருந்து மீண்டு வந்தார்.
இதற்காக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றார். அவர் வரவிருக்கும் ரஞ்சி டிராபி தொடரிலும், அடுத்ததாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் (அக். 19-நவம்பர் 5) பெங்கால் அணிக்காக விளையாட திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அவரது முழங்கால் மீண்டும் வீங்கியுள்ளது. இதிலிருந்து மீள குறைந்தது 6 முதல் 8 வாரங்கள் ஆகும். இதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ‘பார்டர்-கவாஸ்கர்’ டிராபி டெஸ்ட் தொடரில் முகமது ஷமி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.