இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது, தொடரில் 1-0 என பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த தோல்வி, இந்திய அணியின் பின்வரிசை பேட்டிங் திறமைகளின் குறைபாடை தெளிவாக காட்டியது. முன்னணிப் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடினாலும், பின்வரிசை வீரர்கள் சில பந்துகளிலேயே ஆட்டமிழந்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனாலேயே தற்போது அந்த இடத்தை நிரப்பும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில், முக்கிய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தற்போது பேட்டிங் பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக இருக்கக்கூடியதால், சிராஜ் போன்ற வீரர்களிடமிருந்து பேட்டிங் பங்களிப்பு கிடைப்பது வெற்றிக்கு தேவையான முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இவர் 30-50 பந்துகள் வரை நிலைத்திருந்தால், மற்றொரு பக்கத்தில் இருக்கும் முக்கிய பேட்ஸ்மேனுக்கு அதிக ரன்கள் சேர்க்க வாய்ப்பு உருவாகும்.
இதே நேரத்தில், இந்திய அணியில் கூடுதல் பேட்ஸ்மேனை சேர்க்கும் யோசனைவுமே அதிகம் பேசப்படுகிறது. ஷர்துல் தாகூருக்கு பதிலாக நிதீஷ் ரெட்டி அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரில் ஒருவர் சேர்க்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் பந்துவீச்சுடன் சற்றே மேம்பட்ட பேட்டிங் திறனும் கொண்டிருப்பதால், அணி சமநிலையை பேணும் வகையில் இத்தேர்வு உதவியாக இருக்கும். தற்போது முகமது சிராஜ் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களின் பயிற்சிப் போக்கை மாற்றியுள்ளது. இந்த மாற்றம் போட்டியில் வெற்றி தேடுவதேயன்றி, எதிர்கால தேர்வுகளிலும் முக்கிய ரீதியாக விளையாடும்.