சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இன்று நடைபெறும் டைமண்ட் லீக் பைனலில் இந்தியாவின் ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா பங்கேற்கிறார். ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற அவர், மீண்டும் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில் அவர் 90.23 மீட்டர் தூரம் எறிந்து தனிப்பட்ட சாதனையை படைத்திருந்தார். இதன் பின்னணியில் இன்று அவர் மீண்டும் 90 மீட்டரை இலக்காக நிர்ணயித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியில் பல்வேறு சர்வதேச வீரர்கள் பங்கேற்கின்றனர். குறிப்பாக ஜெர்மனியின் ஜூலியன் வேபர், கிரெனடாவின் ஆண்டர்சன் பிடர்ஸ், டிரினிடாட் & டொபாகோவைச் சேர்ந்த கெஷோர் வால்கட், கென்யாவின் ஜூலியஸ் யெகோ, மால்டோவாவின் ஆண்ட்ரியன் மார்டாரே, சுவிட்சர்லாந்தின் சைமன் விலேண்ட் ஆகியோர் கடும் சவாலை விடப்போகின்றனர்.
நீரஜ் சோப்ரா தனது உற்சாகத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்திய ரசிகர்களும் அவரின் சாதனைக்கு காத்திருக்கின்றனர். சூரிச் பைனலில் வெற்றி பெற்றால், அவர் தனது உலகளாவிய நிலையை மேலும் வலுப்படுத்துவார். ஒலிம்பிக்கில் அவர் தங்கம் வென்றபோது போலவே, இன்றைய போட்டியும் அவரின் விளையாட்டு வாழ்க்கையில் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.
இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 11.15 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு இல்லையெனினும், வாண்டா டைமண்ட் லீக் யூடியூப் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் மூலம் நேரடியாக பார்க்கலாம். இந்தப் போட்டியில் நீரஜ் சோப்ரா வெற்றிபெற்றால், அது இந்திய விளையாட்டுத் துறைக்கே பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.