பிரெஞ்சு: பிரெஞ்சு பொலினீசியா தீவில் ஒலிம்பிக் அலைச் சறுக்கு போட்டி தொடக்க விழா நடந்தது.
உயரமான அலைகள் எழும் ஃபிரெஞ்சு பொலினீசியா தீவில் ஒலிம்பிக் அலைச் சறுக்கு போட்டி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. பூர்வகுடி மக்கள், கடற்கரை பகுதியில் சேகரிக்கப்பட்ட மணலை பாத்திரத்தில் ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். அலைச்சறுக்கு வீரர், வீராங்கனைகளும் தங்கள் நாட்டு கொடிகளுடன் பின் தொடர்ந்தனர்
சேகரிக்கப்பட்ட மணலை ஒரு இடத்தில் கொட்டி, தீவு மக்களின் ஒற்றுமையை பறைசாற்றினர். தொடர்ந்து டிரம்ஸ் இசைத்து அலைச் சறுக்கு போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.
பாரிஸ் நகரில் இருந்து 16 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பொலினீசிய தீவில் நடைபெறும் அலைச் சறுக்கு போட்டியை காண வந்துள்ள பார்வையாளர்களை மகிழ்விக்க நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.