கராச்சி: பாகிஸ்தானில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. 353 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக துரத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி பாகிஸ்தான் சாதனை படைத்தது.
இந்தப் போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர் மேத்யூ ஃப்ரிட்கே ரன் எடுக்க ஓடிக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி வாக்குவாதம் செய்தார். நடுவர் தலையிட்டு சமாதானம் செய்தார். இதையடுத்து தெம்பா பவுமா ரன் அவுட் ஆனார். ஆனால் சவுத் ஷகீலும், கம்ரன் குலாமும் பெவிலியன் செல்ல விடாமல் தடுத்து கொண்டாடினர். இந்த விஷயங்களை விசாரித்த ஐசிசி, நடத்தை விதிகளை மீறியதற்காக ஷஹீன் ஷா அப்ரிடிக்கு 25 சதவீத அபராதமும், சவுத் ஷகீல் மற்றும் கம்ரான் குலாமுக்கு 10 சதவீத அபராதமும் விதித்துள்ளது.