பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி பெற்றார். இன்று (ஆகஸ்ட் 03) நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய தகுதிச் சுற்று ஆட்டத்தில் பெண்களுக்கான தனிநபர் வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி 6-4 என்ற கணக்கில் ஜெர்மனியின் மிச்செல் குரோப்பனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நான்காவது செட்டில் பின்னடைவு ஏற்பட்டாலும் செட் முழுவதும் திடமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்
முதல் செட்டில் 27-24 என்ற புள்ளிக்கணக்கில் 2 புள்ளிகளைப் பெற்ற பிறகு, எலிமினேஷன் சுற்றில் தனது ஜெர்மன் வீரரை 6-4 என்ற கணக்கில் தோற்கடித்தார் இந்தியர். அதன்பின்னர் இருவரும் 27-27 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டாவது செட்டைப் பகிர்ந்து புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டனர். மூன்றாவது செட்டை தீபிகா 26-25 என மேலும் இரண்டு புள்ளிகளுக்கு வென்றார்.
இதன் மூலம் இன்று மாலை நடைபெறும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அதேபோல் இந்தியாவை சேர்ந்த பஜன் கவுர் வில்வித்தை போட்டியில் கடுமையாக போராடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்தார்.