சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்களின் கோஷங்கள் வானத்தை அதிர வைப்பது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி ரசிகர்களின் வெற்றி முழக்கம் விண்ணை எட்டியது. இப்போட்டியில் ஆர்சிபி 50 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது.
பொதுவாக சிஎஸ்கே வீரர்களின் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் திறமையை பார்த்து ரசிகர்கள் அதிகம் கோஷமிடுவார்கள். இது சிஎஸ்கே வீரர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. ஆனால் வழக்கம் போல் இல்லாமல் ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ஆட்டம் மந்தமாக இருந்தது.

சிஎஸ்கே வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் திணறினர். இதனால் சிஎஸ்கே ரசிகர்களின் உற்சாகம் குறையத் தொடங்கியது. ஆனால் அதற்கு நேர்மாறாக மைதானத்தில் கூடியிருந்த ஆர்சிபி ரசிகர்கள் ஆர்சிபி… ஆர்சிபி… என்று உற்சாகக் குரல் எழுப்பி அரங்கமே அதிர்ந்தனர். ஆர்சிபி ரசிகர்களின் ஆரவாரம் சிஎஸ்கே ரசிகர்களை அமைதிப்படுத்தியது. மைதானத்தில் ஆர்சிபி ரசிகர்களின் ஆரவாரம் மற்றும் நடனம் போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.