இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. தொடர் தொடக்கமான முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஆனால் அந்த போட்டியில் இந்தியா 5 சதங்கள் அடித்த சாதனையையும், ரிஷப் பண்ட் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து வரலாற்றுச் சாதனை செய்ததையும் காண முடிந்தது. குறிப்பாக, பண்ட் தனது சதத்தை குட்டிக்கரணம் அடித்து கொண்டாடியது இணையத்தில் வைரலானது.

இந்தியாவின் வெற்றி முயற்சியில் முக்கிய பங்கு வகித்த பண்ட், கடந்த ஐபிஎல் இறுதி போட்டியிலும் சதத்தை அடித்த பின் அதை கொண்டடினர் மேலும் குட்டிக்கரணம் அடித்தார். முதல் டெஸ்ட்டிலும் இதையே தொடர்ந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சதம் அடிக்கும்போது ஜாம்பவான் சுனில் கவாஸ்கரே நேரில் கேட்டுக் கொண்டு, அதை செய்ய ஊக்குவித்தார். ஆனால் லேசான தசைப் பிடிப்பு காரணமாக பண்ட் அதைச் சீராக செய்யவில்லை.
இந்நிலையில், பண்டுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தின்ஷா பர்டிவாலா ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “பண்ட் மீண்டும் கிரிக்கெட்டில் விளையாடுவது எங்களுக்கே மூன்றாவது அதிசயம் போல உள்ளது. அவ்வளவு பெரிய காயத்திலிருந்து அவர் மீண்டிருக்கிறார். அவர் குழந்தை பருவத்தில் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்றவர் என்றாலும், மீண்டும் குட்டிக்கரணம் செய்வது தேவையற்றது.”
அவர் மேலும் கூறினார், “பண்ட் சதம் அடிப்பது மகிழ்ச்சியான தருணம். ஆனால் அந்த நொடியில் அவசியமில்லாமல் முழங்கால், குவிந்த சாய்வு உள்ளிட்ட சைகைகள் அவருடைய முழங்கால் மற்றும் ரத்த நாளங்களுக்கு சிக்கலை உருவாக்கலாம். சில சமயங்களில் முழங்கால் இடப்பெயர்வு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. எனவே, அவர் கொண்டாட்டத்தை பிற வழியில் காட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.