இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவரும் போது, எதிர்வரும் 18-வது சீசன் மார்ச் 21-ஆம் தேதி துவங்கி மே 25-ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இந்த தொடருக்கான அட்டவணை இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடர் பற்றிய மெகா ஏலம் கடந்த மாதம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் 10 அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் போட்டி போட்டு வாங்கி தங்கள் அணிகளை பலப்படுத்தினர். அந்த வகையில் பல வீரர்களின் அணி மாற்றம் ஏற்பட்டது, இதன் காரணமாக பல அணிகள் புதிய கேப்டன்களையும் நியமித்து வருகின்றன.
அந்த வகையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் மாற்றம் நடைபெறுவதாகத் தெரிகிறது. கடந்த 3 ஆண்டுகளாக லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுல் தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மாற்றம் உள்ளதால், லக்னோ அணியால் ரூபாய் 27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரிஷப் பண்ட், 2016 ஆம் ஆண்டிலிருந்து டெல்லி அணிக்காக விளையாடி வந்துள்ளார் மற்றும் 2021 ஆம் ஆண்டிலிருந்து அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார். கடந்த ஆண்டு விபத்து காரணமாக அவர் ஐபிஎல் தொடரை தவறவிட்டார், பின்னர் இந்த ஆண்டு அந்த அணியிலிருந்து வெளியேறி மெகா ஏலத்தில் கலந்துகொண்டார்.
இதைத் தொடர்ந்து, தனது மதிப்பை சோதிக்க விரும்பிய ரிஷப் பண்டுக்கு லக்னோ அணி 27 கோடி அளித்து, தற்போது புதிய கேப்டன் பதவியையும் வழங்கவுள்ளது.