ஐபிஎல் 2025 தொடரின் 52வது போட்டி மே 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்து பிளே ஆஃப் சுற்றுக்கான தங்கள் வாய்ப்பை உறுதிப்படுத்தியது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஈடுபாடு மிகுந்த இந்த போட்டி ரசிகர்களை கடைசி பந்து வரை பரபரப்பில் வைத்திருந்தது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 214 ரன்கள் என்ற பாரிய இலக்கை நிர்ணயம் செய்தது. விராட் கோலி 62 ரன்கள், ஜேக்கப் பேத்தல் 55 ரன்கள் என பொலிந்த நிலையில், இறுதியில் களமிறங்கிய ரொமாரியோ செபார்டு வெற்றியின் நாயகனாக மாறினார். 19வது ஓவரில் கலீல் அகமதுக்கு எதிராக அவர் ஒரே ஓவரில் 33 ரன்கள் குவித்தார். அதன் பின் கடைசி ஓவரிலும் 20 ரன்கள் விளாசிய அவர், வெறும் 14 பந்துகளில் அரை சதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது வேகமான ஹாஃப்சென்சுரியை அடைந்தார்.
இதற்குப் பதிலாக களமிறங்கிய சென்னை அணி கடைசி வரை போராடியும் வெற்றியை மிஞ்ச முடியாமல் 20 ஓவரில் 211/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இளம் வீரர் ஆயுஸ் மாத்ரே 94 ரன்கள் விளாசியதோடு, ஜடேஜா 27 ரன்கள் எடுத்தாலும், வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
பெங்களூரு அணிக்கு பவுலிங்கில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கிய பங்களிப்பு அளித்தார். ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட செபார்டு, இது தன்னுடைய நாள் என்று உணர்ந்ததும் அனைத்து பந்துகளையும் பவுண்டரி அல்லது சிக்சராக அடிக்க திட்டமிட்டதாக கூறினார்.
முன்னதாக சில போட்டிகளில் ஆர்சிபியின் பேட்டிங் துறை தடுமாறிய நேரத்தில், ஆலோசகர் தினேஷ் கார்த்திக் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களை தனிப்பட்ட பயிற்சிக்கு அழைத்துச் சென்றார். இந்த பயிற்சி தான் இன்று தன்னைக் களத்தில் வெற்றிகரமாக மாற்றியதாக செபார்டு தெரிவித்தார். டிம் டேவிட் கூறியபடி பந்து நின்று வருவதால் வடிவத்தை கட்டுப்படுத்தி அடிக்குமாறு செய்ததையும் பகிர்ந்தார்.
அவருடைய பேட் ஸ்விங் மற்றும் பவர் ஹிட் ஆகியவைகளால் அதிக பலம் கிடைத்ததாகவும், சிக்கனமாகவே விளையாட திட்டமிட்டிருந்தாலும், “இன்று என் நாள்” என்ற எண்ணத்தில் தான் ஒவ்வொரு பந்தையும் பௌண்டரி அல்லது சிக்சருக்கு அடிக்க முயன்றதாக கூறினார்.
பேட்டிங் சிறப்பாக அமைந்தாலும், பவுலிங்கில் சில இடங்களில் கசப்பு இருந்ததாகவும், அதில் இருந்து புவனேஸ்வர் குமார் மற்றும் லுங்கி நிகிடி இருவரும் அணியை மீட்டதாகவும் கூறினார்.
இதனால் பெங்களூரு அணி 8வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்த வெற்றி ஆர்சிபி ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரிக்க செய்துள்ளது.