சென்னை: வெளிநாடுகளில் கேரம், வாள்வீச்சு போட்டிகளில் பங்கேற்க செல்லும் பெண் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி நிதியுதவி வழங்கினார். உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நவம்பர் 10 முதல் 17 வரை நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த நாகஜோதி, காசிமா, மித்ரா, பயிற்சியாளர் மரிய உரிதுராம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் செலவுக்காக, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் தலா ரூ.1.50 லட்சம் காசோலைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி நேற்று வழங்கினார்.
மேலும், வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை நியூசிலாந்தில் நடைபெற உள்ள ஜூனியர் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக ஜாய்ஸ் அஷிதாவிடம் ரூ.2 லட்சம் காசோலையை உதயநிதி வழங்கினார்.
நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.