முலான்பூர்: ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சாதனை படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் கவுதம் கம்பீர் (10 போட்டிகள் – 2014-15) முதலிடத்திலும், ஷேன் வார்னே (8 போட்டிகள் – 2008) அடுத்த இடத்திலும் உள்ளனர்.

ஷ்ரேயாஸ் ஐயர் (8 போட்டிகள் – 2024-25) மூன்றாவது இடத்திலும், முன்னாள் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி (7 போட்டிகள் – 2013) நான்காவது இடத்திலும் உள்ளனர். ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோல்வியடைந்தது. இதில் வெற்றி பெற்றிருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரும் கேப்டனாக தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பார்.