டெல்லி: ஐபிஎல் தொடரில் டில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஷர் படேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எதற்காக தெரியுமா?
டில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஷர் படேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் டில்லியில் (13 ம் தேதி) நடைபெற்ற போட்டியில் டில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் டில்லி கேபிடல்ஸை வீழ்த்தியது.
இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதன் காரணத்தினால் டில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஷர் படேலுக்கு பிசிசிஐ தரப்பில் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டாடா ஐபிஎல் தொடரின் 29-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக டில்லி கேபிடல்ஸ் விளையாடியது. இந்தப் போட்டியில் டில்லி அணியின் கேப்டன் அக்ஷர் படேல் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், டில்லி அணிக்கு விதி 2.22-ன் படி ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மெதுவாக பந்துவீசிய காரணத்துக்காக முதல் முறையாக டில்லி கேபிடல்ஸுக்கு அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.