தென்னாபிரிக்க அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. கெபேஹா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 109 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை 2-0 என கைப்பற்றியது.
முதல் இன்னிங்ஸ்: தென் ஆப்ரிக்கா 358 ரன்கள், பதிலுக்கு இலங்கை 328 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 317 ரன்கள் எடுத்தது.
இலங்கையின் 2வது இன்னிங்ஸ்: 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4-வது நாள் முடிவில் 205/5 ரன்களை எட்டியுள்ளது. 143 ரன்கள் தேவை என்ற நிலையில், 5-வது நாளில் கேசவ் மஹராஜ் 97 ரன்கள் சேர்த்த நிலையில், குசல் மெண்டிஸ் (46) 6-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
எனினும், தனஞ்சய டி சில்வா (50) நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார். பின்னர் பிரபாத் ஜெயசூர்யா (9), விஷ்வா பெர்னாண்டோ (5) ஆகியோர் ஆட்டமிழக்க, இலங்கை 238 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தென்னாப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டேன் பேட்டர்சன் ஆட்ட நாயகனாகவும், டெம்பா பவுமா (327) தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நிலைகள்: இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா 63.33% வெற்றி சதவீதத்துடன் முதலிடத்திற்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா (60.71%) இரண்டாவது இடத்திற்குச் சரிந்தது, இந்தியா மூன்றாவது இடத்தில் (57.29%) உள்ளது.
இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்று சாதனை படைத்தது.