தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஸ்ரீதர்ஷினி மாநில அளவில் நடந்த கபாடி போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
பறவைகள் மழையின் போது ஒரு உறைவிடத்தை தேடி ஒளிகிறது. ஆனால் பருந்து மட்டும் தான் மேகத்துக்கு மேலே பறக்கிறது. அதுபோல் சாதனையாளர்களும் சோதனைகளையும், தோல்விகளையும் கண்டு துவளாமல் மேலும் மேலும் உயரே பறக்கும் பருந்தை போன்றவர்கள். எதில் இருந்து நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லையோ அதுவே தவறு என்பது ஆகும்.
தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்று சாதனையாளர்கள் தெரிந்து வைத்திருப்பதால் எளிதாக வெற்றியை நோக்கி செல்கின்றனர். ஆனால் தோல்வியடைந்தவுடன் துவண்டுவிடுபவர்கள் எப்போதும் அதை தாண்டுவது என்பது இயலாத காரியமாகி விடுகிறது. எனவே எந்த தோல்வியையும் ஏற்றுக் கொண்டு அதில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேறுவதே வெற்றியாளர்களுக்கு தேவையான முக்கியமான விஷயம் ஆகும்.
சிறப்பான நாளை வேண்டுமானால்.. நேற்றை விட இன்று இன்னும் அதிகமாக உழைக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல் கடந்த 2 ஆண்டுகளால் கபாடி போட்டியில் பல்வேறு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுகள் பெற்ற சித்திரக்குடியை சேர்ந்த மாணவி ஸ்ரீதர்ஷினி மாநில அளவிலா கபாடி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி புவனேஸ்வரி. இந்த தம்பதியின் மகள் ஸ்ரீதர்ஷினி (14). ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விண்ணமங்கலத்தை சேர்ந்த உதயகுமார் கபாடி பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று வருகிறார். பள்ளி அளவில் புதுக்கோட்டையில் நடந்த கபாடி போட்டியில் வெண்கல பதக்கம் என்று உள்ளார். மண்டல அளவிலான போட்டி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளியில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் முதலிடம் பெற்று விருது வென்றுள்ளார்.
இதேபோல் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடந்த முதல்வர் கோப்பை காண கபாடி போட்டியில் இடம் பெற்று விருது மற்றும் சான்றிதழை வென்றுள்ளார். இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் 27 மாநிலங்களுக்கு இடையிலான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கபாடி போட்டியில் தமிழக அணிசார்பில் ஸ்ரீதர்ஷினி கலந்து கொண்டார். போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
வெண்கலப் பதக்கம் வென்று ஊருக்கு திரும்பிய மாணவி ஸ்ரீ தர்ஷினியை கிராம பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
மாநில அளவிலான போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதுக்கு குறித்து மாணவி ஸ்ரீதர்ஷினி கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளுக்கு மத்தியிலான கபாடி போட்டி, மாவட்டம் மற்றும் மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன். தற்போது பாட்னாவில் நடந்த மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பயிற்சி பெற்று வருகிறேன். அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தினர் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருவதால் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற முடிகிறது என்றார்.