புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர், மறைந்த டான் பிராட்மேன், 52 டெஸ்ட் போட்டிகளில் 99.94 என்ற அசாதாரண சராசரியில் 6996 ரன்கள் குவித்த வரலாற்று வீரராக இன்று நினைவுகூரப்படுகிறார்.
1947-48ல், இந்தியாவுக்கு எதிராக விளையாடிய பிராட்மேன், அந்தத் தொடரின் முடிவில் 6 இன்னிங்சில் 715 ரன்கள் குவித்து, 3 சதங்கள், 1 இரட்டைச் சதம் அடித்து, ஆஸ்திரேலிய அணிக்கு 4-0 என்ற கணக்கில் அபார வெற்றியைத் தேடித் தந்தார்.
இந்த இன்னிங்ஸில் பிராட்மேன் அணிந்திருந்த பச்சை நிற தொப்பி 80 ஆண்டுகளுக்கு பிறகு ஏலத்திற்கு விடப்பட்டது. இது ‘சூரிய ஒளியால் மங்கி, பூச்சிகளால் சிறிது பாதிக்கப்படும்’ என்று கூறப்பட்டது. 10 நிமிடங்கள் நீடித்த ஏலத்தில் ஆஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவரால் ரூ. 2.63 கோடி என்ற மதிப்புக்கு வாங்கினார்.