சென்னை: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 17வது லீக் ஆட்டத்தில், சென்னை அணிக்கும் டில்லி அணிக்கும் இடையே அதிரடிப் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டில்லி அணியின் கேப்டன் அக்ஷர் படேல் பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ், கடந்த போட்டியில் காயம் அடைந்த நிலையில், அவரின் ஆட்டம் சந்தேகமாக இருந்தது. ஆனால், அவர் களமிறங்கியுள்ளார்.

சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், சென்னை அணியும், டில்லி அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில், கடந்த போட்டிகளில் பார்ம் அவுட்டில் தவித்து வரும் திரிபாதி மற்றும் ஓவர்டன்னுக்கு பதிலாக, முகேஷ் மற்றும் கான்வே அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும், டில்லி அணியில் டூபிளசிஸ் விளையாடவில்லை, சமீர் ரிஸ்வி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது வரை, இரு அணிகளும் 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 19 போட்டிகளில் சென்னையும், 11 போட்டிகளில் டில்லியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொடரில், சென்னை அணி 3 போட்டிகளில் விளையாடி, முதல் போட்டியில் மும்பை அணியை தவிர்த்து, கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. எனவே, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.