துபாய் : இந்திய வீரர் பாண்ட்யா கட்டியிருந்த வாட்ச்சின் விலை ரூ.7 கோடியா? என்று கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் பாண்ட்யா பந்துவீசியபோது கையில் ஒருவகை வாட்ச் அணிந்திருந்தார்.
அந்த வாட்ச், மிகச் சிலரிடமே இருக்கும் விலை அதிக យ Richard Mille RM 27-02 வாட்ச் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், அந்த வாட்ச்சின் விலை இந்திய மதிப்பில் ரூ.7 கோடி என்றும் அந்தத் தகவல் கூறுகிறது. இத்தகவல் ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இவ்வளவு விலை உயர்ந்த வாட்சையா பாண்ட்யா கட்டியிருந்தார் என்று கேள்வி எழுப்புகின்றனர்.