கொல்கத்தா : கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் புகுந்த கோலி ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பாதுகாப்பை மீறி, கிங் கோலியை ரசிகர் ஒருவர் சந்தித்துள்ளார். KKRக்கு எதிரான சேஸிங்கின்போது அரை சதம் கடந்து விளையாடிக் கொண்டிருந்தார் கோலி.
13 ஆவது ஓவரின் இடையே திடீரென மைதானத்திற்குள் பாய்ந்து வந்த ரசிகர், ஆசி பெற கோலியின் காலில் விழுந்தார். இதை சற்றும் எதிர்பாராத கோலியும், அவரை தூக்கி எழுப்பி கட்டியணைத்து அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் சற்று நேரம் மைதானத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து காவலர்கள் விரைந்து வந்து ரசிகரை மைதானத்தில் இருந்து வெளியேற்றினர்.