சிங்கப்பூர்: 18 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷும், நடப்பு உலக சாம்பியனான 31 வயதான சீனாவின் டிங் லிரனும் பங்கேற்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் உரிமை சிங்கப்பூருக்கு கிடைத்துள்ளது.
இந்த போட்டி நவம்பர் 20 முதல் டிசம்பர் 15 வரை நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) கடந்த ஜூலை மாதம் அறிவித்தது.எனினும் சிங்கப்பூரில் போட்டி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
இதனிடையே போட்டியை நடத்துவதற்காக FIDE குழு சிங்கப்பூரில் உள்ள 4 நகரங்களை ஆய்வு செய்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், டிங் லிரன் மற்றும் குகேஷ் இடையிலான போட்டி சிங்கப்பூரில் உள்ள ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா மைதானத்தில் நடைபெறும் என சிங்கப்பூர் செஸ் கூட்டமைப்பு நேற்று அறிவித்தது. 138 ஆண்டு கால உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் தென்கிழக்கு ஆசியாவில் போட்டி நடைபெறுவது இது 2வது முறையாகும். முன்னதாக 1978-ம் ஆண்டு பிலிப்பைன்ஸின் பாகுயோ நகரில் இந்தத் தொடர் நடைபெற்றது.