புதுடில்லி: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப் 44 பிரிவில் இந்திய வீரர் சந்திப் 62.82 மீட்டர் தூரம் எறிந்து தங்கத்தை கைப்பற்றினார். இதே போட்டியில் 62.67 மீட்டர் தூரம் எறிந்த அவரது சக வீரர் சந்தீப் வெள்ளியை பெற்றார்.

அதே சமயம், எப் 64 பிரிவில் சுமித் அன்டில் 71.37 மீட்டர் தூரம் எறிந்து தங்கத்தை வென்று சாதனை படைத்தார். 2023 பாரிஸ், 2024 கோபே, தற்போது 2025 என தொடர்ந்து மூன்றாவது உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கத்தை வென்று அவர் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் இந்தியா இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்று, பட்டியலில் 4வது இடத்தில் முன்னேறியுள்ளது. முதல் மூன்று இடங்களில் பிரேசில், போலந்து, சீனா ஆகியவை உள்ளன.