துபாய் : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் போட்டியில் இலங்கை அணியை வெற்றி பெற்றதை தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னேறியது.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இலங்கைக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 179 ரன்கள் குவித்தது. சேஸிங்கில் குணரத்னே (66) போராடினாலும், இலங்கை 173 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் நிலையில் ரசிகர்கள் வெகு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்ற உறுதியுடன் ரசிகர்கள் உள்ளனர்.