நேற்று இரவு வடக்கு அயர்லாந்தில் உள்ள பிராடி கிரிக்கெட் கிளப் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 256 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் எவின் லீவிஸ் 44 பந்துகளில் 8 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உட்பட 91 ரன்கள் எடுத்து அதிகபட்சமாக விளையாடினார்.
கேப்டன் ஷாய் ஹோப் 27 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 51 ரன்கள் எடுத்தார், கீசி கார்டி 22 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 48 ரன்கள் எடுத்தார். ஐரிஷ் அணிக்காக மேத்யூ ஹம்ப்ரிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 257 ரன்கள் என்ற இலக்கை துரத்திய அயர்லாந்து 20 ஓவர்களில் 194/7 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதிகபட்சமாக ராஸ் அடேர் 48 ரன்களும், ஹாரி டக்டர் 38 ரன்களும், மார்க் அடேர் 31 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக, அகீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம், மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. முதல் இரண்டு போட்டிகள் மழை காரணமாக மழையால் ரத்து செய்யப்பட்டன.