சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்றது.
161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் இந்திய அணி இன்று தனது 2-வது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டம் துபாயில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வெற்றி நெருக்கடியுடன் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
ஏனெனில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், இன்றைய போட்டி உட்பட எஞ்சியுள்ள ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும்.