2025 மாஸ்டர்ஸ் டி20 கிரிக்கெட் தொடரில், ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் இந்த போட்டி இந்தியாவின் மாஸ்டர்ஸ் அணிக்கு சிறப்பாக அமைந்தது. சச்சின் டெண்டுல்கர் தலைமையில் இந்தியா அணி தங்களது லீக் சுற்றில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளை தோற்கடித்தது. ஆனால், கிரிக்கெட்டின் அசுரனாக கருதப்படும் ஆஸ்திரேலிய அணி, ஷேன் வாட்சன் தலைமையில் இந்தியாவை வென்றது. இதன் பின்னர், இந்தியா 2வது இடத்தை பிடித்து செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

மார்ச் 13ஆம் தேதி நடந்த முதல் செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா 220-7 ரன்கள் குவித்தது. ஜாம்பவான் சச்சின் 42 ரன்கள் குவித்து கிளாஸ் ஆட்டம் வெளிப்படுத்தினார். அவருடன் விளையாடிய யுவராஜ் சிங் 59 (30) ரன்கள் எடுத்து அசத்தினார். ஸ்டுவர்ட் பின்னி 36 (21), யூசுப் பதான் 23 (10) மற்றும் இர்பான் பதான் 19*(7) ரன்கள் சேர்த்து அணிக்கு உதவினர்.
ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா சிறந்த பௌலிங் தாக்குதலை மேற்கொண்டு, 18.1 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணியை சுருட்டி, 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சபாஷ் நதீம் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலம், இந்தியா லீக் சுற்றில் கற்ற தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
இந்த வெற்றியுடன் இந்தியா ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றது.
இன்று, 2000 சாம்பியன்ஸ் டிராபி காலிறுதியில் 84 (40) ரன்கள், 2007 டி20 உலகக்கோப்பை செமி ஃபைனலில் 70 (30) ரன்கள், 2011 உலகக் கோப்பை காலிறுதியில் 57* ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை எடுத்த யுவராஜ் சிங், 2025 மாஸ்டர்ஸ் டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்ய முக்கிய பங்கு வகித்தார்.
25வது ஆண்டின் 4வது முறையாக யுவராஜ் சிங், ஆஸ்திரேலிய அணியை வெளியேற்றியதைப் பார்க்கும் போது, அவரை இந்தியாவின் அரசன் என கருதுவது தவறானதல்ல.