விமான நிலையங்கள், வரலாற்றுச் சின்னங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அமைப்பு 1969 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உருவாக்கப்பட்டது. தற்போது 12 சிறப்புப் படைகளுடன் இந்தப் படை செயல்படுகிறது.
இந்த ஆண்டு முதல் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இந்தப் படையும் ஈடுபட்டுள்ளது. தாஜ்மஹால், செங்கோட்டை, 68 விமான நிலையங்கள் போன்ற வரலாற்றுச் சின்னங்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தப் படையில் ஏராளமான பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், சிஐஎஸ்எஃப் படையில் அனைத்து மகளிர் சிறப்புப் படையை உருவாக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 1,025 பெண் காவலர்களைக் கொண்ட பிரிவு உருவாக்கப்படும்.