புது டெல்லி: ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா உக்ரைனில் போரை தூண்டி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். எனவே, அந்த நாடு கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்றால், தற்போதுள்ள 25% வரியுடன் கூடுதலாக இந்திய பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும். இருப்பினும், இதை இந்தியா ஏற்க மறுத்துவிட்டது.
இதற்கிடையில், ரஷ்யாவுடனான தனது உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவிற்கு விஜயம் செய்து ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்பைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புடின் விரைவில் இந்தியா வருவார் என்று தோவல் கூறினார். இதற்கிடையில், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக நேற்று ரஷ்யா சென்றார்.

மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ரஷ்ய துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவின் அழைப்பின் பேரில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக வரும் நேற்று ரஷ்யாவுக்குச் செல்வதாகக் கூறப்பட்டது.
இன்று அங்கு நடைபெறும் வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா அரசுகளுக்கிடையேயான ஆணையத்தின் 26-வது கூட்டத்திற்கு அவர் இணைத் தலைமை தாங்குவார். இந்தியா-ரஷ்யா வணிக மன்றத்திலும் ஜெய்சங்கர் உரையாற்ற உள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.