மைசூரு: ஆங்கில புத்தாண்டு நாளில், மைசூரின் யோக நரசிம்ம சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 2 லட்சம் லட்டுகள் தயாராகின்றன. ஆண்டுதோறும் ஜனவரி 1ஆம் தேதி, மைசூரில் உள்ள இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இந்த வருடம், சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படவுள்ளது.
கோவில் நிர்வாக அதிகாரி சீனிவாஸ் அடவி, “இந்த வருடம், 2025 ஜனவரி 1ஆம் தேதி, 2 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு வினியோகிக்க தயாராக உள்ளன” என்று தெரிவித்தார். மேலும், “கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ராஜ்குமார் லட்டு வினியோகிக்கும் சேவையை துவக்கினார், அந்த சம்பிரதாயத்தை இன்றும் தொடர்ந்து வருகிறது” என்றார்.
கோவிலில் அதிகாலை 4 மணி முதல் லட்டு பிரசாதம் பகிரப்படும், மேலும் புளியோதரையும் பக்தர்களுக்கு வழங்கப்படும். 100 சமையல் ஊழியர்கள் இந்த லட்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.