
பீஹாரின் பங்கா மாவட்டம் அமர்பூரில் உள்ள பள்ளியில், கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி அரசு பரிந்துரைத்த ஹெச்.பி.வி. தடுப்பூசி மாணவியருக்கு செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி கருப்பைப்பை வாய்ப் புற்றுநோயை தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
தடுப்பூசி செலுத்தப்பட்ட சில மணி நேரத்திலேயே 20க்கும் மேற்பட்ட மாணவியர் வயிற்று வலி, தலைச்சுற்றல் மற்றும் சுவாசிக்க முடியாமை போன்ற உடல்நலக்குறைவுகளை அனுபவித்தனர்.

இதனால் அதிர்ந்த பள்ளி நிர்வாகம், உடனே மாணவியர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. சிகிச்சைக்கு பின்னர் மாணவியர்கள் அனைவரும் தற்போது நிலைத்த நலனுடன் உள்ளதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், மாணவியரின் பெற்றோர் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுடைய பிள்ளைகளின் நிலை குறித்து அவர்கள் ஆவேசம் வெளியிட்டனர்.
தகவலை அடிப்படையாகக் கொண்டு, மருத்தவர்கள் இந்த தடுப்பூசிக்கு இடைக்கால பக்கவிளைவுகள் ஏற்படுவது சகஜம் என்றும், இது ஆபத்தான ஒன்றல்ல என்றும் தெரிவித்தனர். மருத்துவ ஆலோசனையின் பின்னர், பெற்றோர் சமாதானமாகி போராட்டத்தை கைவிட்டனர்.இச்சம்பவம் பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் முறைகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மீதான கவனத்தை அதிகரிக்க வைத்துள்ளது.